ராஜசிங்கமங்கலம்: திருப்பாலைக்குடி நாட்டுப்படகு மீனவர்களுக்கு இரண்டாவது முறை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
தொண்டி அடுத்த திருப்பாலைக்குடி மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து நாட்டுப்பாடகில் மீன்பிடிக்க சென்ற விமல் ராஜ், மாதேஷ்,சக்ரம், கார்த்தி ஆகிய நான்கு பேர் கடந்த 6ந் தேதி கச்சத்தீவில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் நான்கு பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.