தூத்துக்குடி: மச்சாது நகர் பாலம் அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் விஜய் என்ற பானை விஜய், தூத்துக்குடி லயன்ஸ் டவுனில் இருந்து மச்சாது நகர் பாலம் அருகே ஊரணி ஒத்தவீடு செல்லும் ரோட்டில் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் உப்பு குடோனில் வைத்து கடந்த மாதம் 19ம் தேதி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்கும் போது கம்பால் அடித்தும் அரிவாளால் வெட்டியும் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.