பாலக்கோடு: ரயிலில் பயணியிடம் நகைப் பையை திருடியவர் கைது 33 பவுன் நகைகள், ரொக்கம் பறிமுதல்
கர்நாடக மாநிலம், பெங்களூரு வடக்கு, சேஷாத்ரிபுரம், ரைசல்தார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜலட்சுமி (62). இவர் செப்டம்பர் 10 ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற தனது அக்காள் மகளின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க மகள் முகிலாவுடன் சென்றிருந்தார். விழா முடிந்து 11 ஆம் தேதி இரவு மதுரையிலிருந்து (தூத்துக்குடி} மைசூர்) விரைவு ரயிலில் புறப்பட்டனர். தங்களது உடைமைகளை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, நகைகள் மற்றும் ரொக்கம் அடங்கிய கைப்பையை தலைக்கு அடியில் வைத்த