பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டலம் கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத