அரியலூர்: சின்னபட்டாக்காடு கிராமத்தில் மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் சின்னபட்டக்காடு கிராமத்தில் உள்ள 02 ட்ரான்ஸ்பார்மர் பெட்டியும் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மின்சார வாரியத்திடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரியத்தை கண்டித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.