சிவகங்கை: சக்கந்தியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகே சக்கந்தியில் அமைந்துள்ள மந்தை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 12 காளைகளும், காளைகளை அடக்க 118 வீரர்களும் பங்கேற்றனர். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளையினை, 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 நிமிடத்திற்குள் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டன.