சிவகங்கை: சிதிலமடைந்த கட்டிடத்தில் தொடக்கப்பள்ளி – மாணவர்கள் உயிருக்கு ஆபத்து, ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட பட்டமங்கலம் ஊராட்சி அருகே உள்ள பன்னைதிருத்தி கிராமத்தில், ஓட்டு கொட்டகை கட்டிடத்தில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டிடம் தற்போது முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சுவர்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் நிலவுவதால், மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்