இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாகூர் கல் பண்டகசாலை தெருவில் உள்ள MOM.மரைக்காயர் மகாலில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியை முஸ்லிம் லீக்கிற்கு திமுக தலைமையிடம் கேட்டு பெறுவது, காரைக்கால் அதானி துறைமுக நிலக்கரி நாகூரில் காற்றில் பரவி பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.