பென்னாகரம்: பென்னாகரம், உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். கைலாஷ்குமார் எம்.பி.,பி.எஸ்., மற்றும் சேலம் பகுப்பாய்வு கூடம் நடமாடும் பகுப்பாய்வு வாகன பொறுப்பாளர் முதுநிலை பொது பகுப்பாய்வாளர். திரு.நரசிம்மன் அவர்கள் ஏற்பாட்டின்படி, தர்மபுரி மாவட்டத்தில் , ஒன்றியம் வாரியாக ' நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை முன்னிறுத்தி பள்ளி, கல்லூரி , பொதுமக்கள் கூடும் இடங்கள் என விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.