காளையார்கோவில்: காளையார்கோவில் அரசு மாணவிகள் விடுதியில் மதமாற்ற முயற்சி குற்றச்சாட்டு – நயினார் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு
சிவகங்கை காளையார்கோவில் அரசு சமூகநீதி மாணவிகள் விடுதியில் மதமாற்ற முயற்சி நடைபெறுகிறது எனும் புகார் எழுந்துள்ளது.மருந்தங்கநல்லூரைச் சேர்ந்த மணிமேகலை என்பவர், தனது மகளை மதமாற்றம் செய்ய விடுதி வார்டன் முயற்சிக்கிறார் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடியிடம் மனு அளித்தார். அந்த மனுவில், “மாணவிகளிடம் தினமும் பைபிள் வாசிக்கும்படி வற்புறுத்துகிறார். கடவுள் வணக்க கூட்டத்தில் கலந்து கொள்ள மாணவிகளை கட்டாயப்படுத்துகிறார்.