தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 'சயின்ஸ் எக்ஸ்போ-25' என்னும் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் தலைமையேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து, அறிவியலின் முக்கியத்துவத்தையும், NMMS போட்டித் தேர்வுகள் மற்றும் இன்ஸ்பையர் அறிவியல் போட்டிகளில் மாணவர்கள் அதிகமாக பங்கேற்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.