வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று 5வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர் மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் புதிய துறைமுக கடற்கரைப் பகுதி உள்ளிட்ட கடற்பகுதிகள் சீற்றம் இல்லாமல் அமைதியாகவே காணப்படுகிறது மேலும் சுமார் 10 அடி வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது