பென்னாகரம் அருகே உள்ள சீலநாயக்கனூர் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க கோரி பொதுமக்கள் மூன்று மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.தருமபுரி மாவட்டம் சீலநாயக்கனூர் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். உலகம் முழுவதும் கணினி மற்றும் செல்போன் பயன்பாடு அதிக அளவில் இருந்தாலும் கூட தற்போது வரை இந்த கிராமத்தில் செல்போன் டவர் அமைக்கப்படவில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பு