கும்பகோணம்: உன்னை காணவில்லையே நேற்றோடு ... திருவலஞ்சுழி பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் இரவோடு இரவாக கிழிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுற்றுப்பகுதிகளில் விடிய விடிய மது விற்பனை நடக்கிறது இதை தடுக்க வேண்டும் என வாசகங்கள் அடங்கிய போஸ்டர் திருவலஞ்சுழி உட்பட சுற்றுப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது. முதல் நாள் இரவு காணப்பட்ட அந்த போஸ்டர் மறுநாள் மதியத்திற்குள் காணாமல் போய்விட்டது. இதனைக் கட்சிக்காரர்கள் கிழித்தார்களா அல்லது போலீசார் கிழித்தார்களா என்பதை இப்போது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.