கோவில்பட்டி: கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீர் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை காலை முதலே மழை பெய்து வந்த நிலையில் முற்பகல் பெய்த மழை காரணமாக கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே தேங்கியது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.