காரைக்குடி: காரைக்குடியில் பன்றிகளை திருடி விற்றதாக இளைஞருக்கு அருவாள் வெட்டு – 3 சிறார்கள் உள்பட 4 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (20). இவர், சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வளர்த்து வந்த பன்றிகளை திருடி விற்பனை செய்தது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. நேற்று மாலை காரைக்குடி உதயநகர் பகுதியில் சென்ற சுரேஷ்குமாரை, “எங்களது பன்றிகளை ஏன் திருடி விற்றாய்?” என்று கூறி வழிமறித்த அறிவாளால் அருவாளால் தாக்கி விட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி தலைமறைவாகினர்.