தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவ கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரி வளாகப் பகுதியில் அமைந்துள்ள ஆண் பெண் இருவருக்கும் தனி தனியாக உள்ள விடுதியில் தங்கி தங்கள் கல்வியை பயின்று வருகின்றனர். மேலும் இவர்களுக்கு அங்குள்ள உணவகத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.