அருப்புக்கோட்டை: பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சி நடத்தியுள்ளார் - காந்தி மைதானத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேச்சு
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது காந்தி மைதானம் பகுதியில் பேசிய ராதிகா சரத்குமார், பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா பொருளாதார அளவில் முன்னேறி உள்ளது என பேசி வாக்கு சேகரித்தார்.