தூத்துக்குடி முள்ளக்காடு பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெக வீரபாண்டியன் மகன் ராம்குமார் (50), புகைப்படக் கலைஞராக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை 4 மணியளவில் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் ராஜபாண்டி நகர் அருகே மோட்டார் பைக்கில் வந்தபோது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.