வேடசந்தூர்: அய்யனார் நகரில் ஆம்னி பேருந்து மோதி ஒருவர் படுகாயம்
சீத்தமரம் நால்ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45) இவர் வேடசந்தூர் வந்துவிட்டு மீண்டும் சீத்தமரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஆத்துமேடு அய்யனார் நகர் பகுதியில் சென்ற பொழுது பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆம்னி பேருந்தில் வந்த பயணிகளை மாற்றுப் பேருந்து மூலமாக அனுப்பி வைத்து பேருந்தை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு.