தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் மீரான்குளம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நிலையில் சுவர் இடிந்து விழுந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட மீதம் உள்ள சுவரை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மீரான்குளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.