தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுப்பையாபுரம் பகுதியில் 2000 ஏக்கர் அளவிற்கு மானாவாரி பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிர்களை கடுமையாக சேதப்படுத்தி கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.