திருப்பரங்குன்றம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி முருகப்பெருமானை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டன. அதன்படி, தூத்துக்குடியிலும் இந்து முன்னணி சார்பில் இன்று விவிடி சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.