திண்டுக்கல் நாகல்நகர் சந்தைப்பேட்டை ரோடு பகுதியில் வசித்து வரும் பெண்களிடம் இதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் மற்றும் முத்துக்குமரன் ஆகிய இருவரும் இப்பகுதியைச் சேர்ந்த பெண்களை வைத்து சுய உதவி குழு தொடங்கி உள்ளனர். சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களிடம் உங்களுக்கு கடன் வாங்கி தருகிறேன் என்று கூறி கிராம விடியல் மூலம் ஒவ்வொரு பெண்களுக்கும் 70000 முதல் ஒரு லட்சம் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அழித்தனர்.