ஓட்டப்பிடாரம்: அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நடைபெற்றது
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் மற்றும் உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி ஆகியோர் தலைமையில் இன்று தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திடீரென தீ விபத்து ஏற்பட்டால் உள்ளே சிக்கி இருக்கும் நோயாளிகளை எவ்வாறு பாதுகாப்பாக காப்பாற்றுவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.