மேலூர்: 'விண்ணை பிளந்த கோவிந்தா கோசம், மக்கள் வெள்ளத்தில் வந்த சுந்தராஜ பெருமாள்'
கள்ளழகர் கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
Melur, Madurai | Aug 9, 2025 அழகுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோவிலில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா கோலாக்கலமாக துவங்கியது இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருள திருத்தேரோட்டமானது வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்