வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம் பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ-வும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளருமான பரமசிவம் தலைமையில் மருத்துவ முகாம் மற்றும் மனு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆ-ரின் உருவப்படத்திற்கு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது.