அருப்புக்கோட்டை: பாலவநத்தம் கிராமத்தில் டெய்லர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி
அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(56). இவர் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். முருகேசன் மதிய உணவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த தேவ சகாயம்(50) என்பவர் முருகேசன் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளார். திடீரென அங்கு முருகேசன் வந்ததால் தேவசகாயம் தப்பி ஓடினார். தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.