சிவகங்கை: ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆட்சியரக பகுதியில் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் 25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் லூயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார்