தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதி கோப்பை காண மாபெரும் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகரத்திலுள்ள 111 அணிகள் கலந்து கொண்டன. இப் போட்டிகளை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.