திருவொற்றியூர்: திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையினால் மாணவர்கள் பாதிப்பு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்கவில்லை என்று பெற்றோர்கள் ஆதங்கம்
சென்னை சுற்றுவட்டார பகுதிகளான திருவெற்றியூர் வண்ணாரப்பேட்டை ராயபுரம் ஆகிய பகுதிகளில் புயல் காரணமாக நேற்று முதல் மழை பெய்து வருகிறது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்காததால் பள்ளி குழந்தைகள் மழை நீரில் நனைந்து செல்லும் சூழ்நிலை உள்ளது மேலும் மழை பெய்யாத நேரத்தில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பதாகவும் பெற்றோர்களின் சிரமத்தை மாவட்ட ஆட்சியர் அறிந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அரசாங்கத்தையும் மாவட்ட ஆட்சியரையும் கடிந்து கொண்டனர்.