வேடசந்தூர் ஒன்றியம் மல்வார்பட்டி ஊராட்சி பண்ணைபுரத்தை சேர்ந்த விவசாயி ஜெயக்குமாரின் மகன் தங்கமுனியப்பன் (வயது 20). இவரும் இவரது நண்பரான நாகம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மல்வார் பட்டியிலிருந்து வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். தங்க முனியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தட்டாரப்பட்டி அருகே உள்ள சம்புளு ஆசாரி குளம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு.