அரியலூர்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து, ஆட்சியரகத்தில் மாதிரி ஒத்திகை பயிற்சி
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று எவ்வாறு தீயை அணைக்கிறார்கள் என்பது குறித்தும், வடகிழக்கு பருவமழையின் போது சாலைகளில் விழும் மரங்களை எவ்வாறு அகற்றுகிறார்கள் என்பது குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.