வேடசந்தூர் ஒன்றியம் பூத்தாம்பட்டி அருகே உள்ள புளியம்பட்டியில் விநாயகர் காளியம்மன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 35 முதல் 10 35 வரை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு அருள் பெற்றுச் செல்லுமாறு ஊர்கவுடர், பூசாரி, பொதுமக்கள், இளைஞர்கள் இரு கரம் கூப்பி வரவேற்கின்றனர். காலை முதலே அறுசுவை அன்னதானம் நடைபெறும், கிராமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். பூத்தாம்பட்டியில் இருந்து இலவச வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.