திண்டுக்கல் மாநகராட்சி 44.வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்தார். திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ.பி.செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சமத்துவ பொங்கல் துவக்கி வைத்து, பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.