கும்பகோணம்: பாதையை அடைத்தால் எப்படி இடுகாட்டுக்கு செல்வது? பாபநாசம் அருகே இறந்தவர் உடலுடன் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல்
தஞ்சாவூர் மாவட்டம் அகர மாங்குடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக இடுகாட்டுக்கு செல்லும் பாதை அதிகாரிகள் திடீரென அடைத்தனர். இந்நிலையில் அகர மங்குடியில் இறந்த ஒருவரின் உடலை அப்பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் வெகுவாக அவதி அடைந்தனர். இதனால் இறந்தவர் உடலை வண்டியில் வைத்து கும்பகோணம் - விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெகுவாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.