இராமநாதபுரத்தில் அரசுமேல்நிலைப்பள்ளியில் 1983-84 ஆண்டு பத்தாம்வகுப்பில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் 42 வருடத்திற்கு பிறகு சந்தித்துக் கொண்டனர். ஆசிரியர், ஆசிரியைகள், முன்னாள் மாணவ, மாணவிகள்மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னாள் மாணவ, மாணவிகள் பள்ளி காலத்தில் நடைபெற்ற தங்களது பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.