கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் இறைச்சி கடை நடத்துபவரின் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை 20000 ரொக்கம் திருட்டு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவர் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல இறைச்சி கடைக்கு சென்று விட்டு நேற்று இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 6 சவரன் தங்க நகைகள், 20,000 ரொக்க பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து இப்ராஹிம் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்