விளாத்திகுளம்: என்.புதூர் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள கொடியங்குளம் என்.புதூர் கிராமத்தில் உள்ள 60 அடி கிணற்றில் ஒரு புள்ளிமான் தவறி விழுந்து விட்டதாக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்த மானை வலை வைத்து உயிருடன் மீட்டனர்.