தூத்துக்குடி: கையகப்படுத்தப்பட்ட சிப்காட் நிலம் ஒரே சீராக இழப்பீடு வழங்கப்படாதவை கண்டித்து விவிடி சிக்னல் அருகில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம், ஏ.குமரெட்டியாபுரம், குமாரகிரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1600 ஏக்கர் விவசாய நிலத்தை சிப்காட் நிர்வாகம் தொழிற்சாலைக்காக இடம் கையகப்படுத்தியது. ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு ஆலைகள் அபிவிருத்திக்காக கையகப்படுத்தப்பட்ட இந்த இடத்தின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சிப்காட் நிர்வாகம் ஒரே சீராக இழப்பீடு வழங்ப்பட வில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர்.