விவேகானந்த கேந்திரம் சார்பில் கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் 1008 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகர பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமப்புற மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.