அரியலூர்: மாவட்டத்தில் 10 கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கபட்டு உள்ளது- ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் KMS 2025- 2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக திருமழபாடி, ஏலாக்குறிச்சி, செங்கராயன்கட்டளை, வடுகபாளையம், கா.மாத்தூர், கண்டிராதீர்த்தம், குலமாணிக்கம், மஞ்சமேடு, இலந்தைகூடம் மற்றும் அழகியமணவாளன் ஆகிய 10 கிராமங்களில் கிராமங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கபட்டு உள்ளது.