தூத்துக்குடி: மீளவிட்டான் பகுதியில் இருந்து பக்கிள் ஓடைக்கு நீர் வரும் அனைத்து பகுதிகளையும் மேயர் ஆய்வு
விழிப்புணர்வோடு செயல்படுவோம்! என்ற குறிக்கோளோடு பருவமழைக் காலத்தைப் பாதிப்புகளின்றிக் கடப்போம் என்ற தமிழக முதலமைச்சர் தி மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதானமான பக்கிள் ஓடைக்கு நீர் வரும் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஜெகன் பெரியசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையினால் நீர் தேங்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.