தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். அதன் பிறகு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.