ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பாண்டித்துரை, நகுல்பிரபு, செந்தில்குமார் ஆகிய 3 பேர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது எங்கள் நண்பர் ரஞ்சித் மூலம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செயலி மூலம் லாபம் ஈட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் எங்கள் 3 பேரிடமும் ரூ.13 லட்சம் பெற்று கொண்டு மோசடி செய்தார் எனவே காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது