கடலாடி: பொதிகுளம் கல்லூரி மாணவர் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கடலாடி அருகே பொதிகுளம் கிராமத்தை சேர்ந்த 22 வயதான கௌதம் இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். வார விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது பொறியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட 10 நபர்களுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றனர் சித்தூர் கிராமத்தில் நீரோடையில் சக நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த போது திடீரென நீர் சுழற்சி ஏற்பட்டு அதில் இழுத்துச் செல்லப்பட்ட கவுதம் நெய்வேலியை சேர்ந்த அருண்குமார் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.