சிவகங்கை: வல்லனியில் படைப்பு ஞாயிறு – மரநடும் விழா
சிவகங்கை அருகே உள்ள வல்லனி பகுதியில், படைப்பு ஞாயிறு கொண்டாட்டத்தை முன்னிட்டு மரநடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வல்லனி பங்குத்தந்தை பிலிப் சேவியர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் மரநடும் நிகழ்வில் கலந்து கொண்டு, புவி வெப்பமாதலை தடுக்கும் விதமாக பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.