பெரம்பூர்: வியாசர்பாடி முல்லை நகரில் மழை தேங்கிய பகுதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி முல்லை நகர் சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் அதிமுக வடசென்னை வட கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் மழைநீர் தேங்கிய இடங்களில் பார்வையிட்ட ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் இதனை தொடர்ந்து பேட்டியை அளித்த அவர் வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு 6400 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது அரசின் நிர்வாகம் திவால் சிறுமலைக்கே மூழ்கிய வட சென்னை என குறிப்பிட்டார்.