வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் கொத்துவா பள்ளிவாசல் அருகில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்தியதாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேவல் சண்டை விளையாடுவவர்களை சுற்றி வளைத்தனர். இதில் ஏராளமானோர் சேவல்களை தூக்கிக் கொண்டு தலை தெரிக்க தப்பி ஓடிவிட்ட நிலையில் இருவரை மட்டும் பிடித்தனர். 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.