குஜிலியம்பாறை பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் டிஎஸ்பி.பவித்ராவுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் DSP தனிப்படையினர் குஜிலியம்பாறை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குஜிலியம்பாறையை அடுத்த இழுப்பப்பட்டியில் சேவல் சூதாட்டம் நடைபெற்றதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரை கண்டதும் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடினர். சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் 15 பேரை கைது செய்து, 63 டூவீலர்கள், ரூ.1.50 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.